ஈசன் உடனே இன்றிரவே இந்நெல் பூராவும் ஆரூரில் சேர்ப்போம் என்று அருளினார் . ஐயன் ஆணைப்படி சிவகணங்கள் பூரா நெல்லையும் ஆரூர் கொண்டு சேர்த்தன . விடிந்து ஆரூர் வாசிகள் தெரு புரா குவிக்கப்பட்டிருக்கும் நெற்குவியலை கண்டு அதிசயித்தனர் . அவை பரவை நாச்சியாருக்கு அனுப்பப்பட்டது என்று கேள்விப்பட்டு எங்கே சேமிப்பார்கள் என்று அதிசயப்பட்டனர் . ஆனால் பரவையார் இத்தனை நெல்லையும் தாமே எடுத்துக்கொள்ள விரும்பாமல் ஆருரவாசிகளை அவரவர் வீட்டு வாயிலில் உள்ள நெல்மணிகளை அவரவர்களே எடுத்துக்கொள்ள சொல்லி பறை சாற்றினார் . அவருடைய நல்ல உள்ளத்தை பாராட்டாதவர் இல்லை .
No comments:
Post a Comment