பரவையாருடைய இச்செயல் எல்லோரையும் மகிழ்வித்து அவரை பாராட்ட வைத்தது . இவ்வாறு இருக்கையில் ஒருநாள் திருநாட்டியத்தான்குடி எனும் ஊரை சேர்ந்த கோட்புலியார் எனும் அடியார் சுந்தரரை தரிசிக்க ஆரூர் வந்து அவரை தம் ஊருக்கு எழுந்து அருளுமாறு வேண்டிக்கொண்டார் . சுந்தரரும் சம்மதித்து அவ்வூருக்கு சென்றார் . கோட்புலியார் தம்பிரான் தோழருக்கு மிக சிறப்பான வரவேற்பு அளித்து அமுது படைத்து மகிழ்ந்தார் . அதன் பின் தன் இரு மகள்களையும் அவரை வணங்க செய்து இருவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண் டுகோள் விடுத்தார் சுந்தரர் அவர்கள் இருவரையும் மடியில் அமர்த்திக்கொண்டு உச்சி முகர்ந்து இவர்கள் இருவரும் என் மகள்கள் அன்றோ என்று கூறி ஆலயம் சென்று ஈசன் மீது பதிகம் பாடி ஊர் திரும்பினார்.
No comments:
Post a Comment