Friday, 18 October 2019

ஈசன்   சுந்தரரின்   பிரார்த்தனையை   நிறைவேற்ற   முடிவு   செய்து   விட்டார பின்பு    கேட்பானேன் .  அவர்   அருளால்   சுந்தரருக்கு   தூக்கம்    வந்தது .  அங்கு   கோயில்   திருப்பணிக்காக   அடுக்கி   வைத்திருந்த   செங்கல்கள்   சிலவற்றை   எடுத்து   போட்டுக்கொண்டு   அதை   தலையணையாக்கி   ஒரு   துண்டை   விரித்து   படுத்து   உறங்கி   போனார் .  விடிந்து   எழுந்து   பார்க்கையில்   செங்கல்கள்   அனைத்தும்   தகதக   என்று   பொன்னாய்   மிளிர்வதை   கண்டார் .  அவருக்கு   இறைவன்   அருளை   நினைக்கும்போது   கண்கள்   நீரை   சொரிந்தன .  உள்ளம்   உருகி   புகலூர்   ஐயனை   அவர்   சன்னதியில்   வந்து   நின்று   மெய்யுருக    "  தம்மையே   புகழ்ந்து     இச்சை   பேசினும் "    எனும்   பதிகத்தை   பாடி   தம்   நன்றியை    தெரிவித்தார் .  வழியில்   சில   தலங்களை   சேவித்துக்கொண்டு      ஆரூர்   வந்தார் .   பரவையார்      மாளிகையில்    பங்குனி   உத்திரம்   கோலாகலமாக   கொண்டாடப்பட்டது .   அடியார்களெல்லாம்   மிக்க  மகிழ்ச்சியுடன்   கொண்டாடி    அமுது     உண்டு   களித்தனர் .      

No comments:

Post a Comment