செங்கணான் சோழ அரியணை ஏறியதும் அவர் சிவபெருமான் திருவருளால் பூர்வஜென்ம நினைவுகளை பெற்றார் . அவர் உடனே திருவானைக்கா சென்று வெண்நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தை கண்டு அதற்கு கோயில் அமைக்க திட்டமிட்டான் . முன் ஜென்மத்தில் யானையால் நேர்ந்த துன்பம் நினைவில் வர யானைகள் ஏற முடியாவண்ணம் மாடக்கோயில்கள் அமைத்தார் . சோழ நாட்டில் அநேக சிவன்கோயில்கள் கட்டுவித்தார் . தந்தையை போலவே தில்லை நடராஜரிடம் அளவற்ற பக்தி கொண்டு சிதம்பரம் சென்று அங்கு இறைவன் தொண்டில் ஈடுபட்டு பெரும் சேவைகள் செய்தார் . அந்தணர்களுக்கு மாளிகைகள் கட்டி வைத்தார் . இவ்வாறு இறைவன் சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டு பல காலம் வாழ்ந்து இறைவன் அடி சேர்ந்தார் .
No comments:
Post a Comment