Tuesday, 1 October 2019

சோழ   நாட்டை   சுபதேவன்   எனும்   அரசன்  ஆண்டு   வந்தான்.  அவர்   மனைவி   கமலவல்லி   எனும்   மாதரசி .     அவர்கள்    குழந்தை    செல்வம்   வேண்டி   தில்லை   நடராஜ  பெருமானை   மனமுருகி   துதித்தனர் .   ஐயன்   மனமிறங்க   அரசி   கர்ப்பம்   தரித்தாள் .   பிரசவ   காலம்   நெருங்கியது.  அரண்மனை   சோதிடர்கள்   இன்னும்   ஒரு   நாழிகை   சென்று   அக்குழந்தை   பிறக்குமானால்   அக்குழந்தை   மூவுலகும்   போற்ற   தக்க   பெருமை   வாய்ந்ததாக  இருக்கும்  என்று     கூறினர் .  அதை   கேட்ட   அரசி   அந்த   நாழிகை    வரும்வரை   தன்னை   தலை   கீழாக   கட்டி     தொங்க   விடுமாறு   கேட்டுக்கொண்டாள் .   என்னே   தியாக   சிந்தனை   அம்மாதிற்கு .அந்த   நாழிகை   வந்ததும்    அவளை   இறக்கி   விட   செய்து   அழகிய   ஆண்   குழந்தையை   பெற்றாள் .   தாமதித்து  பிறந்ததால்   குழந்தையின்       கண்கள்   சிவந்து   இருந்தன .  அரசியார்   ஆசை   தீர   பார்த்து   'என் ராஜா   செங்கண்ணனோ '  என்று   கொஞ்சினாள் .   ஆனால்   துரதிஷ்டவசமாக   பிரசவ   வேதனை   காரணமாக   சீக்கிரம்   மாண்டு   போனாள்  அந்த   மாதரசி   என்னே   அவள்   தியாகம் .  மன்னன்   மிக்க   துக்கமடைந்தான் .  குழந்தைக்கு   செங்கணான்   என்றே   பெயர்   சூட்டினான் .  உரிய   பருவம்   அடைந்ததும்   அவனை   அரசனாக   முடிசூட்டி   அரசன்   தவ   வாழ்வை   ஏற்றான் .     

No comments:

Post a Comment