ஈசன் சேராமானுக்கு தான் கனக சபையில் சுந்தரர் தம்மை மகிழ்விக்க பாடிய பாக்களில் மயங்கி லயித்து விட்டதால் சலங்கை ஒலி கேட்க தாமதம் என்று விளக்கினார் . அதைக்கேட்ட சேரமான் ஐயன் தம் அடியார்களிடம் வைத்துள்ள அன்பை எண்ணி மிக்க அதிசயம் அடைந்தார் . அத்துடன் சுந்தரரையும் காண பேராவல் கொண்டார் . உடனே புறப்பட்டு பொன்னம்பலத்தை அடைந்தார் . ஆனால் சுந்தரர் கிளம்பி சென்று விட்டதால் அங்கு ஆனந்த தாண்டவம் புரியும் அம்பலவாணன் மீது பொன்வண்ணத்தந்தாதி பாடி மகிழ்ந்தார் . மகிழ்ந்த எம்பெருமான் சிலம்பொலி கேட்க செய்து சேரமானை பரவசத்தில் ஆழ்த்தினார் . சுந்தரர் திருவாரூர் சென்று விட்டதை அறிந்த சேரமான் ஆரூர் சென்றார்
No comments:
Post a Comment