உடனே அமைச்சரை அழைத்து பொன்னும் மணியும் ஆடைகள் கொண்டு வர செய்து பாணபத்தரிடம் எம்பெருமான் திரு உள்ளபடி இவற்றை சமர்ப்பிக்கிறேன் . இன்னும் இவ்வரசு உரிமையையும் தர சித்தமாக உள்ளேன் என்று கூறினார் . பத்தர் அரசருக்கு ஈசன் அடியார்களிடம் உள்ள தன்னலமற்ற அன்பை கண்டு மெயசிலிர்த்து போனார் . பேச வாயெழவில்லை . ஐயனே எனக்கு தேவையான அளவு திரவியம் எடுத்துக்கொள்ளவே ஈசன் ஆணை . ஆகவே வேண்டியதை எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி அவ்வாறே செய்தார் பத்தர் . அவரை நகர எல்லைவரை வந்து வழி அனுப்பினார் சேரமான் .
No comments:
Post a Comment