பல்லவ மன்னன் மாமல்லன் பரஞ்சோதியின் மாபெரும் சாதனையை கண்டு மிக்க அதிசயித்து அவரை கவுரவித்து பெரும் பரிசளிக்க விரும்பினான் . அமைச்சர்களும் பிரதானிகளும் கூட்டி அச்சபையில் பரஞ்சோதியின் ஈடு இணையற்ற செயல்களை வெகுவாக பாராட்டி அவரை போற்றி கொண்டாடினான் . அதை அடுத்து பேசிய ஒரு அமைச்சர் அவருடைய பெரும் சிவத்தொண்டை வெகுவாக போற்றி இப்படிப்பட்டவர்களுக்கு இவ்வுலகில் எதிரிகள் இருக்க முடியாதன்றோ என்று முடித்தார் . மன்னன் மிக்க அதிர்ச்சி அடைந்தான் . இவ்வாறு பெரும் அடியாரை போருக்கு அனுப்பி பெரும் பாவத்தை செய்து விட்டேனே என்று பெரிதும் வருந்தினான் . ஆசனத்தை விட்டு இரங்கி பரஞ்சோதி கால்களில் விழுந்து அறியாமல் தான் செய்த பிழையை மன்னிக்க வேண்டினான் . அனால் பரஞ்சோதி பெருந்தன்மையுடன் மன்னா இதில் தவறு என்ன உள்ளது .படை தலைவனாக என் கடமையை தான் செய்தேன் . இதில் உமது தவறு ஏதும் இல்லை . என்று சமாதானம் செய்தார் .
Thanks for the inputs. I was not aware of this.Getting lot of information from this blog.
ReplyDelete