மனம் நெகிழ்ந்த மாமல்லன் கண்கள் கலங்க சேனாதிபதியை வணங்கி 'ஐயனே இனியும் உம்மை சேவகனாக கருத என் மனம் இடமளிக்கவில்லை . மன தூய்மையோடு நான் வழங்கும் இவைகளை ஏற்று கொண்டு உம் இறைத்தொண்டை தொடர வேண்டுகிறேன்' என்று சொல்லி பொன்னும் பொருளும் அவர் பாதங்களில் சமர்ப்பித்தான் . பரஞ்சோதியார் அவைகளை பெற்றுக்கொண்டு தம் சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடி வந்தடைந்தார் . அங்கு தங்கி மனைவியருடன் தம் இறைத்தொண்டை மனமகிழ்வோடு தொடங்கினார் . இப்படி இருக்கையில் அத்தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது . அதற்கு சீராளன் என்று பெயர் சூட்டி அருமை பெருமையுடன் வளர்த்து வந்தனர் . ஆளுடை பிள்ளையரான சம்பந்தர் அந்த பக்கம் விஜயம் செய்த போது அவரை தம் இல்லத்தில் தங்க வைத்து அமுது செய்வித்து பரமானந்தம் அடைந்தார் சிறுத்தொண்டராகிய பரஞ்சோதியார் . சம்பந்தப்பெருமான் அவர் பெருமையை 'பைன்கோட்டூ மலர்ப்புன்னை ' எனும் பதிகத்தில் சிறப்பித்து பாடியுள்ளார் .
No comments:
Post a Comment