Wednesday, 22 May 2019

கழற்றறிவார்   என்று   பட்டப்பெயர்    பெற்ற   பெருமாக்கோதையார்   அமைச்சர்கள்   விருப்பத்தை   ஏற்று   சேரநாட்டு  மன்னனாக       முடி   சூடினார் .  செங்கோலை   தாங்கிய   சேரமான்   பட்டத்து   யானை    மீதேறி   ஆலயம்   சென்று   இறைவனை   மனதார   வழிப்பட்டு   ஊர்வலமாக   அரண்மனை   திரும்பினார் .   வழியில்   வண்ணான்   ஒருவன்   துணி   வெளுக்க   உபயோகிக்கும்   உவர்மண்   பொதியை     தோளில்   சுமந்து  கொண்டு   எதிரே   வந்தான் .  உவர்   மண்   மழையினால்   கரைந்து   அவன்   உடலெல்லாம்   வெள்ளையாக   வழிந்து   திருநீறு   பூசினாற்போல   காணப்பட்டது .   அதை   கண்ணுற்ற   சேரமான்   மனதில்  சதா   குடி   இருக்கும்  சிவபெருமான்     அடியாராக   வண்ணான்   காட்சி   அளித்தான் .   உடனே   யானையிலிருந்து    இறங்கி   அவன்   காலில்   விழுந்தார்.      வண்ணான்   நடுங்கி   ஐயா   நான்   வண்ணான்  என்று   நடுங்கியபடி   கூறினான்.   ஆனால்   சிறிதும்   கலக்கமடையாத   சேரமான்   'அடியேன்   சேரன் .  எனக்கு   சிவனடியார்   கோலத்தை   காட்டினீர்.  மகிழ்ச்சி .  வருந்தாமல்   செல்லுங்கள் '   என்று   கூறி    அனுப்பினார்   என்னே   அவர்  சிவபக்தி .

No comments:

Post a Comment