Tuesday, 21 May 2019

கார்கொண்ட   கொ டைக்கழறிற்றறிவார்க்கும்  அடியேன் |
சேரநாட்டில்   திருவஞ்சைக்களம்   சிவபெருமான்   கோயிலை   தன்னகத்தே   கொண்ட    கொடுங்கோளூரில்   அரச   பரம்பரையில்   பிறந்தவர்    பெருமாக்கோதையார் .   சிவபெருமானிடம்   அளவுகடந்த   பக்தி   கொண்டவர் .  எதிலும்   பற்றிலாதவர் .    ஆலயம்   செல்வதற்கு   ஒரு   நாளும்  தவறமாட்டார் .   அரச   பதவியிலும்   சிறிதும்   நாட்டம்   இல்லாதவர் . 
அப்போது   அரசாண்ட செங்கோற்பொறையான்   எனும்   அரசன்   பதவியில்   சிறிதும்   நாட்டம்   இல்லாமல்   தவ   வாழ்வை   மேற்கொள்ள   ஆவல்   கொண்டான்.  ஆகையால்   வேறு   ஒரு   தகுந்த   அரசனை   தேர்ந்தெடுக்கும்படி    கேட்டுக்கொண்டான் .   அமைச்சர்கள்   கூடி   ஆலோசித்து   அரசாள    மிக   தகுதி   வாய்ந்தவராக   பெருமாக்கோதையாரை     தேர்ந்தெடுத்து   அவரிடம்   தங்கள்   அவாவை  தெரிவித்தனர் .    அவர்   அஞ்சைக்கள   பெருமானை   கேட்டு  முடிவு   சொல்வதாக   கூறி   அங்கு   சென்று   ஈசனிடம்      விண்ணப்பித்தார் .   ஈசன்  அவர்   விண்ணப்பத்தை      ஏற்று   அவருக்கு   எதிராளியின்   மனதை   அறியும்   பெரும்   திறமையை   கொடுத்து   நல்லபடியாக   ஆட்சி   செய்யுமாறு   கட்டளை        இட்டார் .  இதனால்   அவர்   கழற்றறிவார்   எனும்  பட்டம்   பெற்றார் .

No comments:

Post a Comment