பல்லவ மன்னன் பரஞ்சோதியை மரியாதையுடன் அழைத்து பல்லவ சேனைக்கு தலைவனாக பதவி ஏற்றுக்கொள்ள வேண்டிக்கொண்டார் . பரஞ்சோதியும் சம்மதித்து அப்பதவியை ஏற்றுக்கொண்டார் . ஆனால் அவர் சிவத்தொண்டை கைவிடவில்லை . பழையபடியே செவ்வனே செய்து வந்தார் . இப்படி இருக்கையில் சாளுக்கர்களுடன் பல்லவர்களுக்கு போர் மூண்டது . பரஞ்சோதி பல்லவ படையை நடத்தி சென்று வாதாபி சேனையை சின்னாபின்னமாக்கி பெரும் வெற்றி யை பல்லவர்களுக்கு தேடி தந்தார் . வாதாபியை அழித்து பெரும் செல்வத்தை பல்லவ மன்னரிடம் சமர்ப்பித்தான் . மன்னன் நரசிம்ம பல்லவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை . இத்தனை சாதுர்யமாக வெற்றி தேடி தந்த சேனாதிபதியை கௌரவிக்க மன்னன் மிக்க ஆவல் கொண்டான்.
No comments:
Post a Comment