Friday, 31 March 2017

ஈசன்   கோபத்துடன்   சிறிது   நேரம்   முன்புதானே   கொடுத்து   சென்றேன் .  அதற்குள்   யார்   இதை   எடுப்பார்கள்   நன்றாக   தேடி   பாரும்    என்று   கடுமையாக   உரைத்தார் . இடிந்து   போன   அமர் நீதியார்    நன்றாக   தேடிவிட்டேன்   ஸ்வாமி  தயவு   செய்து   இதை   பெற்று   கொள்ளவும்   என்று    சொல்லி   பட்டு   கோவணத்தை   காட்டினார் .  நன்றாக   இருக்கிறதே  எனக்கு    நான்   கொடுத்து   சென்ற   துணிதான்   தேவை .   நான்   முன்பே   அது   சாதாரணமானது   அல்ல   என்று  சொன்னேன்   அதை   மறைத்து   வைத்துக்கொண்டு   நாடகமாடுகிறாயா ?   உன்னை   நம்பி   அதை   ஒப்படைத்தேன் .  என்று   கோபமாக   கத்தினார் .  அமர் நீதியார்    மிகுந்த   வருத்தமடைந்தார் .  இப்பெரும்   அபவாதத்தை   கேட்டு   மனமுடைந்து   போனார் .  ஐயா   பிறர்   பொருளுக்கு   நான்   என்றுமே   ஆசைப்பட்டதில்லை .  என்   மீது   இந்த   அபவாதத்தை   என்னால்   தாங்க   முடியவில்லை .  இதற்கு   ஈடாக   நான்   என்னிடமுள்ள   எதையும்   தர   சித்தமாக   இருக்கிறேன் .     தயை   செய்து   தாங்கள்   ஏதாவது   வழி   சொல்லுங்கள்   என்று   மன்றாடினார் .  ஈசனும்   ஒரு   துலாக்கோலை   எடுத்து   வர   செய்து   ஒரு  தட்டில்   தண்டத்தில்   கட்டி   இருந்த   மற்ற   கௌபீனத்தை     வைத்து   அதற்கு   எடையாக   பொருள்   ஏதேனும்   கொடுக்க   சொல்கிறார் .  அவரும்  மகிழ்ச்சியுடன்   வீட்டிலுள்ள   துணிகள்   எல்லாவற்றையும்   கொண்டுவர     மற்ற   தட்டில்   வைக்கிறார் .  ஆனால் ஈசன்   வைத்த   துணி   இருந்த   தட்டு   துளிக்கூட   எழும்ப வில்லை .   வீட்டிலுள்ள   மற்ற   பொருள்களை   வைக்க   சம்மதம்   கேட்டு   அவைகளையும்   வைக்கிறார் .ஆனாலும்   அந்த   தட்டு   துளி கூட   எழும்பவில்லை ..  தான்   தினம்   வணங்கும்   நல்லூர்   ஈசனை   மனதார   த்யானித்தபடி   இனி   வீட்டில்   இருப்பது   தாம்   தம்   மனைவி   தம்   குழந்தை   மட்டுமே   என்று   பெரிய   துலாக்கோலாக   வரவழைத்து   அதை   வல ம்  வந்து   அவருடைய   துணிக்கு   ஈடாக    தாங்கள்   மூவரும்   துலா   தட்டில்   அமர்கின்றனர் .  உடனே   மேகத்திலிருந்து   மலர்மாரி   பொழிகிறது .  சிவனடியார்   மறைந்து   ஈசன்   காட்சி   கொடுத்து   அம்மூவரையும்   தன்னிடம்   சேர்த்துக்கொள்கிறார் .

1 comment:

  1. For the first time i hear about this "amar needhiyar". Very interesting, thanks for posting

    ReplyDelete