ஈசன் சிரித்து கொண்டே சென்றார் . அமர் நீதியார் அதை பயபக்தியுடன் பத்திரமாக ஓர் இடத்தில் வைத்தார் . சிறிது நேரத்தில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது . சிறிது நேரத்திற்கு பிறகு அடியார் வந்தார் . தெப்பலாக நனைந்திருந்த அவர் தன்னை நன்றாக துடைத்துக்கொண்டு பிறகு அமர் நீதியாரை பார்த்து நான் கொடுத்து சென்ற கோவணத்தை கொண்டுவர சொல்கிறார் . அவரும் இதோ எடுத்து வருகிறேன் என்று சொல்லி உள்ளே செல்கிறார் . ஆனால் என்ன அதிர்ச்சி ! அவர் வைத்த இடத்தில் அதை காணவில்லை . எங்கு தேடியும் கிடைக்கவில்லை . ஈசன் வெளியிலிருந்து எத்தனை நேரம் இவ்வாறு ஈரத்துடன் நிற்பது என்று கோபத்துடன் வினவினார் . அமர்நிதியார் உடல் பதறியது . அவரை வெகு நேரம் காக்க வைக்கவும் முடியாது . அவசரமாக ஒரு புதிய பட்டு கோவணத்தை எடுத்து வந்து கொடுத்தார் . பயபக்தியுடன் மன்னிக்க வேண்டும் நான் வைத்த இடத்தில் அதை காணவில்லை . எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று பதற்றத்துடன் கூறினார்
No comments:
Post a Comment