இவ்வாறு இவர் ஈசன் மீதும் ஈசனடியார்கள் மீதும் கொண்ட பக்தி வளர்ந்தது . அவருக்கு ஈசனை பல திவ்ய க்ஷேத்திரங்களுக்கு சென்று அங்கெல்லாம் வழிபட ஆவல் எழுந்தது . காவியும் ருத்திராக்ஷமும் தரித்து தல யாத்திரை கிளம்பி ஈசனையும் அடியார்களையும் வணங்கியவாறே சென்றார் . பல இடங்களில் ஈசனை தரிசித்து விட்டு திருவாரூர் வந்து சேர்ந்தார் . ஒருநாள் அவர் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்களுடன் இருந்தபோது சுந்தரர் கோவிலுக்கு வருகை தந்தார் . அவர் மனமெல்லாம் அங்கிருந்த அடியார்களையெல்லாம் கண்டு மிக்க பக்தி மேலிட்டு இவர்களைப்போல் தானும் ஆவது எப்போது என்ற எண்ணம் மேலிட்டவாறு கருவறையை நோக்கி நடந்தார் . அங்குள்ள அனைவரும் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்தினர் . விறன்மிண்டர் எல்லோராலும் வணங்கப்பட்ட அவர் யார் என்று வினவ அவர்கள் திருமணத்தன்று எம்பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டவரும் அவரால் வன்தொண்டர் என்று அழைக்கப்பட்டவருமான சுந்தரர் என்று பதிலுரைத்தனர்
No comments:
Post a Comment