விறன்மிண்டர் சுந்தரர் அவ்வாறு அந்த மண்டபத்திலுள்ள அத்தனை அடியார்களையும் வணங்காமல் தாண்டி சென்றது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது . கோபம் தாளாமல் இத்தகைய அடியார்கள் கூட்டத்தை மதியாமல் தாண்டி சென்ற வன்தொண்டர் சுந்தரர் நமக்கு தேவை இல்லை என்று சுந்தரர் காதில் விழுமாறு உரக்க சொன்னார் . அதை செவிமடுத்த சுந்தரர் அதிர்ந்து போனார் . மனத்தால் தான் அவர்களிடம் இத்தனை மரியாதை வைத்தும் புற வணக்கத்தையே மதித்து அவர் சொன்ன சொற்கள் அவரை முள்ளாக தைத்தன . விறன்மிண்டர் அதோடு நிறுத்தாமல் இவ்வாறு செய்த சுந்தரரை ஆட்கொண்ட சிவபெருமானும் தேவை இல்லை என்று உரக்க சொன்னார் .
No comments:
Post a Comment