அவர் வாழ்ந்த ஊருக்கருகில் நல்லூர் என்னும் சிவக்ஷேத்திரம் இருந்தது . அமர் நீதியார் அங்கு அடிக்கடி சென்று ஈசனை வழிபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் . அங்கு வரும் பக்தர்களுக்கு அமுது படைப்பதை மிக மகிழ்ச்சியுடன் செய்து வந்தார் . மேலும் அங்கு வரும் அடியார்களுக்கு ஆடையும் கௌபீனமும் அளிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் . அதற்காக அங்கு ஒரு மடத்தையும் கட்டி வைத்தார் . இவருக்கும் அங்கு அடிக்கடி போய்வர நேர்ந்ததால் அவரும் அங்கேயே தங்கி விட்டார் .
No comments:
Post a Comment