அந்த சிவபெருமானே தனக்கு தேவை இல்லை என்று விறன்மிண்டர் முழங்கியதும் சுந்தரரை வெகுவாக பாதித்தது . அதிர்ந்து போய் ஈசனிடம் சரணடைந்தார் . தடுத்தாட்கொண்ட ஈசனே ! என் மனமெல்லாம் அடியார்களிடம் உள்ளபோது நான் புற வணக்கம் செய்யாததால் என்னை இவ்வாறு பழி சுமக்க ஆளாக்கி விட்டாயே ?என்று புலம்பினார் . ஈசன் சுந்தரா கலங்காதே என்னை பாடுவதை போல் என் அடியார்களையும் பாடு அவர்கள் தொண்டும் உலகம் அறியட்டும் . என்று கூறினார் . சுந்தரர் அவர்களை பற்றி தனக்கு எதுவும் தெரியாதே என்று வருந்த இறைவன் ''தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன் " என்று முதலடி தொடங்கி கொடுத்து பாட சொல்கிறார் . சுந்தரரும் அவ்வாறே தேவாசிரிய மண்டபத்திற்கு சென்று ஒவ்வொரு தொண்டரையும் பெருமை படுத்தி சொல்லி அவர்க்கு தான் அடியார்க்கு அடியேன் என்று பாடுகிறார் . "விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன் " என்று சுந்தரர் பாடியதும் நெகிழ்ந்து போன விறன்மிண்டர் அவர் காலடியில் விழுகிறார் . ஈசனும் மகிழ்ந்து விறன்மிண்டரை தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் . இறைவன் தன்னை வேண்டாம் என்று ஒதிக்கியவரையும் தன் தொண்டர்களை உளமாற நேசித்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது . சுந்தரரை சொல்லும்போது இந்த சம்பவம் நாம் கண்டிருக்கிறோம் . இந்த பாடலின் பெருமையையும் அறிந்தோம் .
No comments:
Post a Comment