Friday, 3 March 2017

முத்தநாதன்   யோசித்து   யோசித்து   சேதி   அரசனை   வீழ்த்த   வழி   தேடினான் .  அரசனின்   சிவபக்தியும்   அவன்   சிவனடியார்   மீது   கொண்டிருந்த   அளவிலா   மதிப்பும்   அவனுக்கு   நினைவு   வந்தது .  அதுவே   அவனுக்கு   ஒரு    மார்க்கம்    காட்டிற்று  .  உடனே   அதை   செயல்   படுத்தினான் .  உடலெல்லாம்   திருநீறு   பூசி   காவியணிந்து   சிவனடியாராகவே   மாறினான் .  குறு   வாளை   ஒரு   பட்டு   வஸ்திரத்தில்   புத்தகம்   போல   சுற்றி   எடுத்துக்கொண்டு   அரண்மனையை   நோக்கி   வேகமாக   நடந்தான் .   அரசனின்   மெய்காப்பாளன்   தத்தன்   என்பவன்   முத்தநாதனை   கண்டதும்   சந்தேகம்   எழ   அவனை   நிறுத்த   முற்பட்டான் .  ஆனால்   முத்தநாதனோ   என்னை   தடுக்காதே ,  நான்   முக்கியமாக   யாரும்   இதுவரை   கண்டிராத   புதிய   ஆகம   நூலை   அரசனுக்கு   போதிக்க   வந்திருக்கின்றேன்   என்று   வேகமாக   அரசன்   மனைவியுடன்   இருக்கும்   அறைக்குள்   நுழைந்து   விட்டான் .

No comments:

Post a Comment