ஈசன் அமர் நீதியாரை பார்த்து நீங்கள் சிவனடியார்களுக்கு செய்யும் சிறந்த தொண்டினை பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன் . மிக்க மகிழ்ச்சி என்று கூறினார் . அதற்கு அமர் நீதியார் இச்செல்வமும் ஈசன் கொடுத்தது அதை இவ்வாறு அடியார்களுக்கு அளிக்க செய்வதும் அவனே ஆகவே இச்செல்வம் எல்லாம் அவனடியாக்களை சேரவேண்டியதே என்று பதிலுரைத்தார் . அந்த சமயம் மேகம் கறுத்து கொண்டு வந்தது . உடனே ஈசன் ஒன்றும் இல்லை மழை வரும் போல் இருக்கிறது . துணிகள் நனைந்து விட்டால் மாற்று ஆடை இல்லை . என்னுடைய இந்த கோவணத்தை பத்திரமாக வைத்திருந்து நான் திரும்ப வந்து கேட்கும்போது கொடுத்தால் போதும் . அது சாதாரண துணி என்று எண்ணிவிடாதே . என்று சொல்லி அவர் தண்டத்தில் கட்டி வைத்திருந்த ஒரு கௌபீனத்தை கொடுத்தார் .. அவரும் சரி ஸ்வாமி என்று மரியாதையுடன் பெற்று கொண்டார் .
No comments:
Post a Comment