Thursday, 28 December 2017

மக்கள்   சந்தோஷ   ஆரவாரத்தோடு   மூர்த்தியாரின்   மேல்   மலர்   தூவி   ஆரவாரித்தனர் .  அமைச்சர்   ஓடிவந்து   மூர்த்தியாரை   பணிந்து   தன்   சந்தோஷத்தை    தெரிவித்தார் .    அவரை  மேளதாளத்துடன்   அரண்மனை முடிசூட்டு   விழா   மண்டபத்திற்கு   அழைத்து   சென்றனர் .  மங்கல   நீராடலுக்கு   பின்பு   அவரை    அலங்காரம்   செய்து   சிங்காதனுக்கு   அழைத்து   செல்ல   அமைச்சர்கள்   வந்தனர் .  மூர்த்தியார்   அவர்களை   வரவேற்று   அமர   செய்து   'உங்கள்  அன்புக்கு   மிக்க   நன்றி .  ஆனால்   ஒரு   வேண்டுகோள்   நான்   சைவத்தில்   மிக்க   ஈடுபாடு   கொண்டவன் .  நாட்டில்   பெரும்பாலோர்   சைவத்தை   கடைபிடிப்பதையே   நான்   விரும்புகிறேன் .  திருநீறு   அபிஷேகமாகவும் ,     ருத்திராக்ஷமே   அணிகலனாகவும் ,  ஜடைமுடியே   கிரீடமாகவும்   இருப்பதையே   நான்   விரும்புகிறேன் .   என்று   தம்   நிபந்தனையை    உரைத்தார் .  எல்லோரும்   மனதார   ஆமோதித்தனர் .  அவரும்  சுந்தரேச   பெருமானை   மனதார   துதித்துவிட்டு   விபூதி   பூசி   ருத்திராக்ஷம்   அணிந்து   சடாமுடியுடன்   அரண்மனை   சென்று   முடிசூடி   கொண்டு   ஆட்சியை   ஏற்றார் . பாண்டிய   நாட்டில்   வெகுகாலம்   நல்லாட்சி   புரிந்தார் .  சிவனடியார்கள்   பயமின்றி   தங்கள்   இறைப்பணிகளை   செவ்வனே   செய்தனர் .  மூர்த்தியாரும்   தாம்   செய்து   வந்த   திருப்பணியை   தொடர்ந்து   செய்து   செய்து   கொண்டு   பலகாலம்   வாழ்ந்து   சிவனடி   சேர்ந்து   மூர்த்திநாயனார்   ஆனார் .

No comments:

Post a Comment