அவருக்கு சுய நினைவே இல்லை . தன் கைங்கரியம் நின்று போன வேதனை அவரை பித்தனாக்கியது . முழங்கை தேய்ந்து எலும்பு வெளிப்பட்டது . அவர் நிறுத்துவதாக இல்லை . குருதி பெருகியது . ஈசன் இனி பொறுப்பாரா ? 'அன்பனே என் மேல் கொண்ட பக்தியால் நீ செய்ய துணிந்த இச்செய்கையை நிறுத்து . கொடுங்கோல் மன்னன் இன்று இரவு இறந்து போவான் . நீயே உன் மனம் போல் ஆட்சி செய்வாய், உன் இறை பணியும் இனி இனிதே தொடரும் ' என்று கூறி மறைந்தார் . திடுக்கிட்டு விழித்த மூர்த்தியார் தன் முழங்கையை பார்த்தார் . எலும்பு தேய்ந்து உதிரம் கொட்டிய முழங்கை எலும்பு சதை வளர்ந்து முன்போல் ஆகி இருப்பதை கண்டு ஈசனின் அன்பை நினைந்து உருகி கண்ணீர் பொங்க ஐயனை மனமாற துதித்தார் . எம்பெருமான் மீது அளவு கடந்த பக்தி பெருக்கெடுத்தது.
No comments:
Post a Comment