வெகு நாட்களாய் உணவு அருந்தாத நிலையில் தாயனார் உடல் மிக தளர்ந்து போயிருந்தார் . அவருடைய மனைவி பூஜைக்கு தண்ணீர் மற்ற சிறிய பொருள்களை ஏந்தி கொண்டு பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் . அவர்கள் சாலையை தாண்டி புல்வெளியில் இறங்கி நடக்க தொடங்கினர் . புல் வெளியில் தரை சமனாக இல்லாததாலும் தாயனாரும் சோர்ந்து போயிருந்தாலும் அவர் கால் தடுக்கி விழ பின்னே வந்த அவர் மனைவி அவர் கீழே விழாமல் தாங்கி கொண்டார் . ஆனால் துரதிஷ்டவசமாக கூடை மண்ணில் வீழ்ந்து அன்னம் கீரை மாவடு யாவும் மண்ணில் வீழ்ந்தன . மனமுடைந்த தாயானார் தான் தினமும் செய்து வந்த திருப்பணி இன்று செய்ய முடியாமல் போனது கண்டு நிலைகுலைந்து போனார் . கதறினார் தான் பட்டினி கிடந்தும் தவறாமல் செய்து வந்த இத்திருப்பணி தவற என்ன காரணம் என்ன தவறு செய்தேன் ? என்று ஈசனிடம் புலம்பினார் .
No comments:
Post a Comment