திருவாரூரில் சுந்தரர் சேரமானோடு எம்பெருமானை தினம் சேவித்துக்கொண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் நாளில் சேரமானார் தான் தம் நாட்டைவிட்டு கிளம்பி வெகுநாட்கள் ஆனதால் திருப்பி செல்ல நினைத்தார் . அவர் சுந்தரரையும் தம்முடன் தம் நாட்டிற்கு தம் விருந்தாளியாக வரும்படி வேண்டிக்கொண்டார் . தம் அரண்மனையில் அவரை உபசரிக்க மிக்க ஆவல் தெரிவித்தார் . சுந்தரரும் அவர் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டு அவருடன் கிளம்பினார் . இருவரும் காவிரியின் தென் கரையில் கண்டியூர் அடைந்தனர் . அவ்வூரின் வடகரை திருவையாறு . சேரமான் ஐயாறப்பனை தரிசிக்க தன் ஆவலை தெரிவித்தார் . சுந்தரரும் சம்மதித்தார் .
No comments:
Post a Comment