சுந்தரர் வரும் செய்தி கேட்ட சேரமான் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தார் . அவருக்கு அவர் வரும் வரை காத்திருக்க பொறுமை இல்லை . அவரை வரவேற்க அவர் பாதி வழி சென்று விட்டார் . அவரை கண்ட சுந்தரருக்கும் பெரும் சந்தோஷம் ஏற்பட்டது . அவருடன் தான் சென்று சேவித்த அத்தனை சிவபெருமான் ஆலயங்களை பற்றியும் பேசி மகிழ்ந்தார் . அந்த மலை நாட்டில் ஐயன் குடி கொண்டிருக்கும் அத்தனை க்ஷேத்திரங்களையும் தரிசனம் செய்து கொண்டு திரும்பினார்கள் . சேரமான் அரண்மனையில் தங்கி அவருடைய உபசரிப்பில் ஆனந்தமாக நாட்கள் சென்றன . நண்பர்கள் இன்பமாக காலம் கழித்தனர் .
No comments:
Post a Comment