சுந்தரரின் பெருமை உணர்ந்த அவ்வூர் மக்கள் அவரை கண்டு ஆசி பெற திரண்டு வந்தனர் . சுந்தரர் குழந்தை பறி கொடுத்த தம்பதிகளின் நிலையை நினைந்து பாகாய் உருக அவர்களை காண ஆவல் கொண்டார் . அந்த தம்பதியர் வந்து அவரை பணிந்து நமஸ்கரித்தனர் . சுந்தரர் பரிவுடன் அவர்களை பிள்ளையை பறி கொடுத்த தம்பதிகள் தங்களான ? என்று வினவினார் . அதற்க்கு அவர்கள் ''சுவாமி அது நடந்து முடிந்த விஷயம் . இப்போது நாங்கள் வெகு நாளாய் தங்களை தரிசிக்க ஆவல் கொண்டிருந்தோம் . இப்போது கிடைத்தது . எங்களை ஆசீர்வதியுங்கள் என்றனர் . அதற்கு சுந்தரர் அவர்களிடம் அந்த மடுவை காண்பிக்க முடியுமா ? என்று கேட்டார் .
No comments:
Post a Comment