சுந்தரர் அடையார்களுடன் காட்டு வழியாக சோழநாடு நோக்கி பயணப்பட்டார் . தன்னுடன் சேரமான் பரிசாக அளித்த பெரும் பொருளையும் சுந்தரர் எடுத்து சென்றார் . எம்பிரானுக்கு தன் அருமை தோழன் இத்தனை காலம் தன்னிடமிருந்து மட்டுமே பொருள் பெற்று வந்த காரணத்தால் வேறு ஒருவரிடமிருந்து அவரும் தன் பிரியமான அடியான் ஆனாலும் பொன்னும் மணியும் பெறுவது பொறுக்கவில்லை . உடனே சிவகணங்களை வேடர் உருவில் சென்று அப்பொருள்களை கவர்ந்து வருமாறு ஆணையிட்டார் . அவர்களும் அவ்வாறே அத்தனை விலை மதிப்பில்லாத பொருள்களையும் அவர்களிடமிருந்து பறித்து வந்தனர் . அடியார்கள் மிக்க அதிர்ச்சி அடைந்தனர் . சுந்தரர் வருந்தினாலும் ஈசன் இச்சை எதுவோ அதுதான் நடக்கும் . வருந்தி ப யனில்லை என்று சமாதானம் கூறினார் . எல்லோரும் திருமுருகன்பாண்டி ஆலயம் வந்து சேர்ந்தனர் .. சுந்தரர் பதிகம் பாடி ஈசனை தொழுதார் . '' எம்பெருமானே வனத்தில் பொருள்களை வேடுவர்கள் கொள்ளை அடிக்க பார்த்தும் காக்காமல் இருந்தது ஏனோ ? என்று நெகிழ்ந்து வினவினார் .
No comments:
Post a Comment