சேரமான் நாட்டு மக்கள் வெகு நாட்கள் பின் நாடு திரும்பும் மன்னன் அவருடைய பெருமை மிக்க நண்பரும் விருந்தாளியாக வந்திப்பதையும் கண்டு பெரும் மகிழ்ச்சியுடன் கோலாகல வரவேற்பு அளிக்க தயாரானார்கள் . வீடுகள்தோரும் தோரணங்கள் மங்கள வாத்தியங்கள் மங்கள கோஷங்கள் எல்லோரும் புத்தாடைகள் அணிந்து ஆனந்தம் பொங்க எதிர்கொண்டு அழைக்க வந்தனர் . சுந்தரர் திருவஞ்சைக்கள பெருமானை வணங்கி அரண்மனை வந்தார் . சேரமான் தமது சிம்மாசனத்தில் அவரை அமர செய்து மனைவியர் நீர் வார்க்க தம் கைகளால் சுந்தரர்க்கு பாத பூஜை செய்து வரவேற்றார்.
No comments:
Post a Comment