சேரநாட்டில் சுந்தரர் விருந்தினராக இருந்த போது ஒருநாள் திருவஞ்சைக்களம் ஆலயம் தொழ சென்றார் . அங்கு ஐயனின் கோலம் கண்ட அவருக்கு மனம் வாடி போனது . அவருக்கு ஈசனை பிரிந்து வாழும் வாழ்வு கசந்தது . மனம் நொந்து பிரார்த்தித்தார் . ''ஐயா இப்புவியில் இன்னும் எத்தனை நாள் வாழ வேண்டும் ? இந்த சம்சார பந்தத்திலிருந்து என்னை மீட்க மாட்டியா ? கரை சேர்க்க மாட்டாயா ? என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் . என்று மனமுருக ''தலைக்கு தலைமாலை அணிந்ததென்னே ? '' என்று பதிகம் பாடி கண்கலங்க துதித்தார் . உடனே எம்பிரான் மனமுருகி போனார் . ஆலால சுந்தரர் தன்னிடம் வந்து சேரும் காலம் நெருங்கி விட்டதை உணர்ந்தார் . பிரமன் மற்றும் தேவர்களிடம் ஆரூரனை அழைத்து வர வெள்ளை யானையை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார் . ஈசன் வேண்டுகோளை செவிசாய்த்த தேவர்கள் வெள்ளை யானையுடன் அஞ்சைக்களம் ஆலயத்தை அடைந்தனர் .
No comments:
Post a Comment