Monday, 10 February 2020

சுந்தரரும்   சேரமானாரும்   காவிரியின்   கரையை    அடைந்தனர் .  அனால்   காவிரி   வெள்ளம்   கரைபுரண்டோடிற்று .  ஓடம்   ஒன்றும்   செல்ல   முடியாமல்   கரையில்   இருந்தன .  அப்பனை   தரிசிப்பது   அசாத்தியம்   என்று     முடிவு   செய்து   சஞ்சலம்   அடைந்தனர் .  அப்போது   சுந்தரர்   ஐயனை   மனதார   வேண்டிக்கொண்டு   ''பரவும்   பரிசொன்று   அறியேன்நான் ''  என்று   மனமுருக   பதிகம்   பாடினார் .   ஐயாறப்பன்   மனம்   இரங்காமல்   இருப்பாரா ?   நதி   வெள்ளத்தில்   ஒரு   பிளவு   ஏற்பட்டது .  மேற்கேயிலிருந்து   வந்த   நதிநீர்   ஆணையிட்டது   போல   அப்படியே   நின்றது .   கிழக்கே   தண்ணீர்   வடிந்து   மணற்பாங்காக   காட்சி  அளித்தது .   சேரமான்    சொல்லொணா   ஆச்சர்யமும்    மகிழ்ச்சியும்   அடைந்தார் .    சுந்தரரை   பாராட்டினார் .  அதற்கு   சுந்தரர் ''  நண்பரே   இது  ஈசன்   உமக்கு   அளித்த   வரமல்லவா ''  என்று   பதிலுரைத்தார் .     

No comments:

Post a Comment