சுந்தரர் மனம் நொந்து ஈசனிடம் அவ்வாறு வினவியதும் கொள்ளை அடித்த அவ்வேடர்கள் கொள்ளை அடித்த அத்தனை பொருள்களையும் கொண்டு வந்து அந்த சன்னதியிலேயே தம்பிரான் தோழரிடம் ஒப்படைப்பித்தனர் . சுந்தரரும் அடியார்களும் அதிசயித்து போனார்கள் .அப்போது ஈசன் ''அன்பனே எப்போதும் என்னிடம் மட்டுமே பொருள் பெற்று வந்த நீ இப்போதும் என்கையாலேயே அப்பொருள்களை பெற வேண்டுமென்ற எண்ணத்தால் யாமே இவ்வாறு செய்தோம் '' என்று திருவாய் மலர்ந்து அருளினார் . சுந்தரர் அதை கேட்டு மெய்சிலிர்த்து போனார் . ஐயனின் அன்பு அவரை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது . அவைகளை பெற்றுக்கொண்டு ஆரூர் திரும்பினார் .
No comments:
Post a Comment