Thursday, 2 January 2020

இடது   கண்   பெற்ற  சுந்தரர்    உள்ளம்   மகிழ்ச்சி   பொங்க   காஞ்சி   பெருமானை   ஒரு   கண்ணால்   மனம்   குளிர   'ஆலந்தானுக்குகந்த   அமுது   செய்தானை '  என்று   பதிகம் பாடி   தரிசித்தார் .   காஞ்சியை   விட்டு   புறப்பட்ட   சுந்தரர்   ஆரூரனை   காணும்   பேராவலால்   எங்கும்   அதிகம்   தங்காமல்      வழியில்   எதிர்ப்பட்ட   ஆலயங்களில்   நுழைந்து   ஐயனை   சேவித்தவாறே   எங்கும்   தாங்காமல்   தியாகேசர்   நினைவால்    உந்தப்பட்டு       விரைவாக    திரு   ஆமாத்தூர்,   திருஅரைத்துறை   பிறகு   திரு   ஆவடுதுறை    சென்று   தன்   பிணியை   நீக்குமாறு   வேண்டியவாறு   பயணித்தார் .  திருந்துருத்தியை   அடைந்தார் .  அங்கு   பெருமான்   அவருக்கு   சிறிது   கருணை   காட்டி   பக்கத்திலுள்ள   திருக்குளத்தில்   நீராட   கூறினார் .  அவரும்  அவ்வாறே   செய்ய   உடல்   களைப்பு   சோர்வு   நீங்கி    புத்துணர்ச்சி       பெற்றார் .    நன்றி   பெருக்குடன் '' மின் னுமா   மேகங்கள் ''  எனும்   பாடி   நன்றி        பெருக்குடன்   மேலும்   சில   ஆலயங்களை   தரிசித்து  கொண்டு    ஆரூர்   வந்தடைந்தார் .  அதற்குள்   அவர்   திரும்பிய   செய்தி   ஊரில்   பரவியது .  அவர்    அடியார்களுடன்   ஆலயம்   வந்தடைந்தார் .    ஐயனை   நோக்கி    உருக்கத்துடன்   ''சோதனை   போதாதா   உன்னை   மனம்   குளிர   இரு கண்ணால்   தரிசிக்க   மற்ற   கண்ணையும்   தாராயோ   என்று   மனமுருக   பாடினார் .  அன்பனின்   வேண்டுகோளை   மறுக்க   இயலாத   தியாகேசன்   மறு   கண்ணையும்   அளித்தார் .

No comments:

Post a Comment