சுந்தரரும் சேரமான் பெருமானும் மதுரையை வந்தடைந்தனர் . அப்போது அங்கு பாண்டியன் மகளை மணந்த சோழ மன்னனும் வந்திருந்தார் . அவர்கள் இருவரும் தம்பிரான் தோழரும் சேரமான்பெருமானும் சேர்ந்து மதுரை வந்தடைந்த செய்தியை கேட்டு மகிழ்ந்து அவர்களை எதிர்கொண்டு அழைத்து அவர் களுடன் சேர்ந்து ஆலவாய் ஈசனை ஒன்றாக தரிசனம் செய்து மகிழ்ந்தனர் . அவ்விருவரையும் தம் அரண்மனைக்கு கோலாகலமாக வரவேற்று உபசரித்தனர் . சுந்தரரும் சேராமானும் பாண்டிய அரண்மனையில் சில காலம் தங்கி மன்னரின் உபசரிப்பை ஏற்று தங்கினர் . அருகிலுள்ள சிவாலயங்களை தரிசித்தும் மகிழ்ந்தனர் .
No comments:
Post a Comment