சுந்தரர் சில பெரியோர்களை அனுப்பி சமாதானம் செய்ய கூறினார் . அனால் பரவையார் அவர் செய்த குற்றம் மன்னிக்க தக்கதல்ல என்று கூறி இனி யாரும் இவ்வாறு வரவேண்டாம் என்று கண்டிப்பாக கூறி அனுப்பினார் . சுந்தரர் அளவிலா வே தனை அடைந்தார் . ''ஐயனே நீ இதுவரை எல்லா துன்பங்களிலிருந்தும் என்னை மீட்டிருக்கிறாய் . நான் சங்கிலியாரை மணந்து கொண்டதை பரவையார் ஏற்கவில்லை. உன் விருப்பப்படி தானே நான் அவளை மணந்தேன் . எனக்கு நீயே கதி . பரவையார் முன்போல் என்னிடம் அன்பு செலுத்த வைப்பது உன் பொறுப்பு ''. என்று இறைவனிடம் மன்றாடினார் . அவரும் 'கவலை படாதே . நானே உன் பொருட்டு தூது செல்கிறேன் . என்று சமாதானம் கூறினார் . மகிழ்ந்தார் சுந்தரர் . தன் பக்தனுக்காக அன்பே உருவான எம்பிரான் தன் தாமரையொத்த பொற்பாதங்கள் நோக தேவர் முனிவர்கள் புடைசூழ ஆரூர் வீதியில் நடந்தார் .
No comments:
Post a Comment