Wednesday, 15 January 2020

இதற்குள்   பரவைக்கு   மனக்குழப்பம்   ஏற்பட்டது . அர்ச்சகராக   வந்தது   சிவபெருமான்   என்ற   ஐயம்    உண்டாயிற்று .  அவர்   சென்றதும்   அங்கு   சூழ்ந்த   தெய்விக   நறுமணம்    காதில்   ஒலித்த   வேதகோஷம்   இதெல்லாம்   அவள்   மனதில்   சந்தேகத்தை   எழுப்பியது .   அவரின்   பேரருள்   பெற்ற   சுந்தரருக்காக   எம்பிரானே   வந்திருப்பாரோ  ?  தவறு   செய்து   விட்டோமோ  என்று   அலை   பாய்ந்தது .  எதிர்த்து   பேசியது   பெரும்   தவறு   என்று   மனம்  பதறியது.     அப்போது   பரவை   என்று   ஈசன்    அழைக்கும்   குரல்    கேட்க    மனம்   புல்லரிக்க   பரவை   ஓடிவந்து   தாள்   திறந்து   அவர்   பாதங்களில்   விழுந்தாள் .   உலகமனைத்தும்    போற்றி   தொழும்   அப்பாதங்கள்    இந்த   ஆரூரனுக்காக   வீதியில்   கால்   தேய   நடந்து   வந்தார்   என்றால்   அவர்   பெருமையை   உணராமல்    உதாசீனம்        செய்தது   எத்தனை   பாபம்   என்று   உணர்ந்த   பரவை    உடனே   அவர்   பின்   சென்று    அவருடன்   இணைந்தாள் .  இருவரும்   சேர்ந்து   ஆரூரில்   சில   காலம்   மனமொத்து   வாழ்ந்தனர் .       

No comments:

Post a Comment