Wednesday, 22 January 2020

இவ்வாறு   இருக்கையில்   சுந்தரரை   பற்றி   கேள்விப்பட்டிருந்த  சேரமான்     பெருமான்  கொடுங்கோளுரிலிருந்து    புறப்பட்டு    சுந்தரரை   காண   ஆரூர்   வந்தார் .  சுந்தரர்   மகிழ்ந்து   அவரை   தம்   மாளிகைக்கு   மிக்க  அன்போடு    வரவேற்று    இருவரும்மிக்க   நேசத்துடன்   பழக்கலாயினர் .  அடியார்கள்   அவர்கள்    ஈருயிர்   ஓருடலாக    பழகுவதை   கண்டு   மகிழ்ந்து   தம்பிரான்   தோழராக   இருந்த   சுந்தரரை    சேரமான்தோழர்   என்று   அழைக்க   ஆரம்பித்தனர் .  இருவரும்   சேர்ந்து   பல   சிவாலயங்களை  றாக   சேவித்து   மகிழ்ந்தனர் .  இவ்வாறு    இருக்கையில்   நம்பிஆரூரருக்கு    ஆலவாய்    ஈசனை  காண   பேராவல்    ஏற்பட்டது .  சேராமானுக்கும்    அதே   பேராவல்   ஏற்பட்டது .   ஆலவாய்   அண்ணல்   தம்   கைப்பட   சேராமானுக்கு   பாணபத்தருக்கு    திரவிய   உதவி  செய்ய   எழுதிய   ஓலை   கண்டது   முதல்   அப்பேராவல்   இருந்து   வந்தது .  தன்னை   ஒரு   பொருட்டாக   மதித்து   தம்   கைப்பட   திருமுகம்   எழுதிய   அண்ணலின்   பேரன்பை   எப்படி   மறக்க   முடியும் ?  இருவரும்   பரவையிடம்   விடை   பெற்றுக்கொண்டு   நாகப்பட்டினம்   திருமறைக்காடு   மற்றும்   சில   சிவத்தலங்களை   சேவித்துக்கொண்டு   திருப்பத்தூர்   வழியாக    வந்தடைந்தனர் .        

No comments:

Post a Comment