சுந்தரர் 'மீளா அடிமை உமக்கே ' எனும் பதிகம் தனக்கே உரிய நட்புரிமையுடன் பாடியது ஐயனை உருக்கியதில் அதிசயம் இல்லை . உடனே தன் தோழனுக்கு இரண்டாவது கண்ணை வழங்கியதும் இயல்பே . சுந்தரரும் நன்றி பெருக்கோடு பதிகங்கள் பாடி மகிழ்ந்து தம்பிரானையும் மகிழ்வித்தார் . தேவாசிரிய மண்டபத்தை அடைந்தார் . அடியார்கள் மகிழ்ச்சியுடன் கூடி இருந்தனர். ஆனால் பரவையார் சிறிதும் இன்பம் அடையவில்லை . ஒற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரை மணந்த செய்தி கேட்ட அதிர்ச்சி அவரை மிக துன்பத்தில் ஆழ்த்தியது . அவரை காண கூட விரும்பவில்லை . அவரை தன் மாளிகையில் அனுமதிக்ககூட விரும்பவில்லை . அடியார்கள் சுந்தரர் வந்த செய்தி சொல்லி அமுது செய்விக்க சொல்ல சென்ற போது பரவையார் அவரிடமிருந்து அடியார்கள் வந்ததை அறிந்து காவலர்களிடம் அவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார் . அவர்கள் இச்செய்தியை வந்து சுந்தரரிடம் தெரிவித்தபோது சுந்தரர் பெரிதும் துக்கத்திற்கு ஆளானார் .
No comments:
Post a Comment