வாகீசப்பெருமானும் சம்பந்தப்பெருமானும் அக்காசுகளைக்கொண்டு பொருள்களை வாங்கி உணவு தயாரித்து மக்களுக்கு வழங்கி அவர்கள் பசியாறுவதை கண்டு ஆனந்தப்பட்டனர் . ஆனால் வாகீசர் மடத்தில் வெகு விரைவிலேயே உணவு தயாராகி மக்கள் பசியாற வழங்கப்பட்டது . ஆனால் சம்பந்தர் மடத்தில் உணவு தயாராக அதிக நேரம் ஆயிற்று . சம்பந்தர் வருத்தமடைந்து அதன் காரணம் வினவினார் . அதற்கு அவர் அடியார்கள் வாகீசப்பெருமான் அளிக்கும் சுத்தமானது என்றும் சம்பந்தர் அளிக்கும் காசு சிறிது மாற்று குறைவானது என்றும் அதை சரியாக்க நேரம் பிடிப்பதாகவும் விளக்கினர் . வாகீசர் உடலை வருத்தி உழவார பணி செய்து ஐயன் மனம் குளிர வைப்பதால் அவருக்கு மாசற்ற பொன் கிடைப்பதே தகும் என்று மனம் தேறி ஐயனை வேண்டி 'வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ' எனும் பதிகம் பாடி 'கறைகொள் காசினை முறைமை ஆக்குவீர் என்று வேண்டி மாசிலா பொன் பெற்று சேவை செய்து மகிழ்கிறார் .
Reading it regularly.In a simple language easy to understand by everyone.
ReplyDelete