அப்பெண் மேலும் கூறினால். '' நாங்கள் பெற்றோருக்கு தெரிவிக்காமல் புறப்பட்டு மருகல் ஈசனை மனமார துதித்தபடி இங்கு வந்தோம் நாங்கள் இங்கு வரும்முன் இருட்டி விட்டதால் இங்கு இந்த மடத்தில் இரவு தங்கி இருந்து காலையில் மருகல் ஈசன் முன் மணமுடித்துக்கொள்ள முடிவு செய்தோம் . இரவில் தூங்கும்போது திண்ணையில் படுத்திருந்த இவரை பாம்பு தீண்டி இருக்கிறது . காலையில் எழுந்து நான் பார்த்தபோது இவர் உடல் முழுவதும் விஷம் தீண்டி மரணம் அடைந்து கிடைக்க கண்டேன். எத்தனை நம்பிக்கையுடன் புறப்பட்டு வந்த எனக்கு எத்தனை அதிர்ச்சி ., என்னையும் அந்த பாம்பு தீண்டி இருக்ககூடதா? வீட்டை எதிர்த்துக்கொண்டு வந்துவிட்ட நான் மறுபடி அங்கு செல்ல முடியாது . அநாதை ஆகிவிட்டேன் . இனி என்செய்வேன் ? " என்று கதறி அழுதாள் .
No comments:
Post a Comment