அந்த வாலிபனை அப்பெண் ஆனந்தம் தாங்காமல் கட்டி தழுவிக்கொண்டு நடந்த விவரங்களை சொன்னாள் . அதை கேட்டு மிக்க ஆச்சர்யம் அடைந்த அவன் அவரை மீண்டும் வணங்கினான் . சொந்தங்களை துறந்து வந்த தங்களுக்கு தெய்வமாக வந்து இப்பேருதவி செய்த அவரை மிக்க நன்றியோடு வணங்கி துதித்தனர் . சம்பந்தர் அவர்களை ஆலயத்திற்கு அழைத்து சென்று ஐயன் முன் அவர்களை தம்பதிகளாக்கி வாழ்த்தி அனுப்பினார் . பின் இறைவனை தொழுதார் .
No comments:
Post a Comment