புகலூரை விட்டு அப்பரும் சம்பந்தரும் சேர்ந்து புறப்பட்டு தங்கள் யாத்திரையை தொடர்ந்தனர் . அப்பர்பெருமான் நடந்து வருகையில் தான் மட்டும் சிவிகையில் செல்ல மனம் வராமல் சம்பந்தர் தானும் நடக்க ஆரம்பித்தார் . அதை கண்டு அப்பர் ஈசன் அளித்த சிவிகை இருக்கையில் சிறுவராக ஞான பெருமான் நடப்பது தகாது என்று எடுத்து உரைக்க சம்பந்தர் அப்படியானால் தங்கள் முதலில் செல்லுங்கள் . நான் தங்களை வந்து சேர்ந்து கொள்கிறேன் . என்று கூறி சிறிது நேரம் தங்கிவிட்டு நிலநக்கர் , முருகனார் மற்றும் சிறுத்தொண்டர் யாரிடமும் விடை பெற்று கொண்டு கிளம்பி சென்று அப்பரை சேர்ந்து கொண்டு இருவரும் திருக்கடவூர் சென்றனர் . அங்கு குங்கிலிய கலைய நாயனாரை சந்தித்து அவருடன் உரையாடி விட்டு அவருடனேயே அமுது செய்து விட்டு அங்கிருந்து திருவீழிமிழலை சென்றனர் .
No comments:
Post a Comment