திருவீழிமிழலையில் மடத்தில் வாகீசரும் சம்பந்தரும் வெவ்வேறு இடங்களில் தங்கி இருவரும் நாள்தோறும் ஆலயம் சென்று எம்பெருமானை வழிப்பட்டு வந்தனர் . இவ்வாறு இருக்கையில் சீர்காழியிலிருந்து சில பெரியோர்கள் வந்து சம்பந்தப்பெருமானை ஊருக்கு வரும்படி அழைத்தனர் . காழிப்பிள்ளை அவர்களை இரவு மடத்தில் தங்க சொல்லி காலை ஐயனிடம் விடை பெற்று கொண்டு வருவதாக சொன்னார் . அவர்களும் அவ்வாறே செய்வதாக கூறி சென்றனர் . மிழலை ஈசன் அவரை அனுப்ப மனமில்லாமல் அவருடைய தேனினும் இனிக்கும் பாக்களை மேலும் சுவைக்க எண்ணியோ என்னவோ அவர் கனவில் தோன்றி குழந்தாய் தோணியப்பரை காண நீ அத்தனை தூரம் செல்ல தேவை இல்லை . நாளை யாமே விமானத்தில் அக்கோலத்தை காட்டுவோம் ' என்று சொல்லி மறைந்தார்
No comments:
Post a Comment