அத்தனை மன வேதனையிலும் அத்தம்பதியர்க்கு நாவுக்கரசருக்கு அமுது படைப்பது நிறுத்துவது மனம் ஒப்பவில்லை . அவர்கள் பெருத்த மன வேதனையுடன் அருமை மகனின் உடலை ஒரு அறையில் படுக்கவைத்து அறையை மூடிவிட்டு நாவுக்கரசரை ஆலயத்திலிருந்து அமுது படைக்க அழைத்து வந்தார் . நாவுக்கரசர் வாசலில் வந்ததும் அங்கு எதோ அசம்பாவிதம் நேர்ந்திருப்பதை உள்ளம் உணர்த்தியது . அவர் திருநீறு எடுத்து எல்லோருக்கும் கொடுக்க முதலில் நாவுக்கரசனை அழைத்தார் . அப்பூதியடிகள் துக்கத்த்தை மறைத்து கொண்டு அவன் இப்போது எதற்கும் உதவ மாட்டான் . என்று பூடகமாக உணர்த்தினார் . அப்பரடிகள் வற்புறுத்தி கேட்டதும் நடந்த உண்மையை கூறினார் . அதிர்ந்த அப்பரடிகள் உடனே நாவுக்கரசனை தூக்கிக்கொண்டு ஆலயத்தில் கிடத்த செய்தார். திங்களூர் ஈசனை மனமுருக பதிகங்களால் தொழுது மகனை உயிர்ப்பிக்க வேண்டினார் . அப்பரடிகள் வேண்டி கேட்டுக்கொண்டால் ஐயன் மறுப்பாரா ? மறுகணமே நாவுக்கரசன் துக்கத்திலிருந்து விழித்தார் போல் எழுந்து அம்மா என்று ஓடிவந்தான் . பெற்றோர்களின் ஆனந்தத்திற்கு அளவேது .
No comments:
Post a Comment