அளவிட முடியாத ஆனந்தம் அடைந்த அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் நாவுக்கரசரை இருந்து உணவு அருந்திவிட்டு செல்லவேண்டுமென்று வருந்தி கேட்டுக்கொண்டனர் . அவரும் கோயிலுக்கு சென்று இறைவனை சேவித்துவிட்டு வந்து உணவு அருந்துவதாக கூறிவிட்டு சென்றார் . தம்பதியரும் மிக்க மகிழ்ச்சியுடன் உணவு தயாரிக்க முனைந்தனர் . அப்போது விதி விளையாடியது . அன்னை மகன் நாவுக்கரசனை தோட்டத்திலிருந்து வாழை இலை வெட்டி எடுத்துவர கத்தியுடன் அனுப்பினாள் . பையனும் தோட்டத்தில் வாழை இலை வெட்ட சென்றான் . மரத்தில் பதுங்கி இருந்த பாம்பு ஒன்று கத்திவழியாக இறங்கி பையனின் கையில் கொத்திவிட்டு மறைந்தது . நாவுக்கரசனும கத்திக்கொண்டு கீழே விழுந்து மாண்டு போனான் . இதை கண்ட அடிகளும் அவர் மனைவியும் மிக்க வேதனையும் அதிர்ச்சியும் தாளாமல் மலைத்து நின்றனர்.
No comments:
Post a Comment