பரமதத்தனின் அவ்வார்த்தைகள் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்தது . பரமதத்தன் புனிதவதியின் தெய்வாம்சத்தை நேரில் கண்ட பிறகு அவளை வணங்கி துதிக்க தோன்றுமே அன்றி மனைவியாக பார்ப்பது எவ்வாறு சாத்தியம் ? என்று தான் அவள் மீது வைத்துள்ள அளவிலா பக்தியை வெளிப்படுத்தினான் . புனிதவதிக்கும் பேரதிர்ச்சி . அவள் நடந்ததை விவரித் தாள் . தன் கணவனுக்கே சொந்தமான தன் பேரழகை இனியும் ஏற்க விரும்பாமல் அவள் கண்ணீர் மல்க இறைவனை துதித்து பரமதத்தனுக்கே உரியதான இவ்வழகை எடுத்துக்கொண்டு யாவரும் கண்டு நெருங்க அஞ்சும் பேய் உருவம் அளிக்குமாறு மனமுருக வேண்டினாள். ஈசனும் அவ்வாறே வழங்க அவள் அவ்வுருவத்துடன் சிவனை துதித்து அற்புத திருவந்தாதி இரட்டை மணிமாலை போன்ற பதிகங்களை . பாடி மகிழ்ந்தார் அவருக்கு .கைலாயம் சென்று பரமனை சேவிக்கும் பெரும் ஆவல் ஏற்பட்டது . பரம்பொருள் அன்னையுடன் வசிக்கும் தலத்திற்கு காலால் நடந்து செல்வது தகாது என்று தலையாலேயே நடந்து மலை ஏறினார் .
No comments:
Post a Comment