Tuesday, 7 August 2018

தலையாலேயே   கைலை  மலை   ஏறிவரும்   அம்மையை   கண்டு   வியப்படைந்த   உமை   அன்னை   ஈசனை   நோக்கி   இவ்வாறு   விகார   ரூபத்துடன்   தன்னை   இவ்வளவு   வருத்திக்கொண்டு   இங்கு   நம்மை   நோக்கி   வரும்   இந்த   அம்மை   யார் ?  என்று   வினவ   ஐயன்   இந்த   அம்மையார்   நாம்   இருக்குமிடம்   புனிதமென்று   கால்   படாதவாறே   வருகிறார் .  இவள்   கணவன்   இவளை   தெய்வமாக   மதித்த   காரணத்தால்   அவரை   பிரிய   நேர்ந்த   இவர்   அவருக்கே   உரிமையான   தன்   அழகிய  ரூபத்தை   தியாகம்   செய்து   இந்த   விகார   ரூபத்தை   வேண்டி   பெற்ற   பதிவிரதா   சிரோன்மணி   என்று   அவளை   வருணித்த   இறைவன்   'அம்மையே '   என்று  மிக   அன்புடன்   அவளை   வரவேற்றார் .   அவளும்   அப்பா   என்று   மனம்   குழைய   அவர்   காலில்   விழுந்தாள் .' உமக்கு   வேண்டியது   என்ன '  என்று   ஐயன்   வினவ ,  அவள்   '  பிறவாமை   வேண்டும் .  அப்படி   பிறப்புண்டேல்      உன்னை  என்றும்   மறவாமை   வே ண்டும் .  இன்னும்   வேண்டும் .  நான்  பாட   நீ   ஆடும்போது   உன்    அடியின்   கீழ்   நிற்க  வேண்டுமென   வரத்தையும்    கேட்டாள் .  அம்பலவாணன்   ஆலங்காட்டில்  அவ்வாறே    காண்பாய்   என்று   வரமளிக்கிறார் .  புனிதவதி   அம்மையாரும்   அவ்வாறே   அவருடைய   ஊர்த்துவ   தாண்டவத்தை   கண்டு   பேரானந்தம்   அடைகிறார் .  பிறகு   அவர்   மீது  பதிகங்கள்   பல   பாடி   பிறகு   சிவனடி   சேர்கிறார் .

No comments:

Post a Comment