அப்பூதி அடிகள் நாவுக்கரசரை இவ்வாறெல்லாம் புகழ்ந்து பேசிவிட்டு அவர் செய்யும் அறத்தொண்டுகளுக்கு முன்பு நாமெல்லாம் எம்மாத்திரம் ? என்று கேள்வி எழுப்பிவிட்டு அது போகட்டும் தாங்கள் யார் என்று சொல்லவில்லையே என்று வினவினார் அப்போது அப்பரடிகள் சைவம் துறந்து சமணத்தில் சேர்ந்து எம்பெருமானை பல விதமாக இழிவாக பேசி ஐயனால் சூலை நோய் தந்து ஆட்கொள்ளப்பட்ட அந்த நாவுக்கரசர் அடி.யேனே என்று உரைத்தார் . அதை கேட்ட அப்பூதி அடிகள் தாம் இத்தனை நாட்களாக இதயத்தில் வைத்து பூ சித்து வரும் நாவுக்கரசர் தம் எதிரே நிற்பது என்பதை அறிந்ததும் எல்லை இல்லா மகிழ்ச்சியுடன் அவர் காலில் விழுந்து கண்ணீரால் அவர் பாதங்களை கழுவினார் . தாங்கள் யார் என்பதை அறியாமல் பேசியதற்கு மன்னிப்பு கோரினார் . அதற்கு அப்பர் வருந்த வேண்டாம் அடிகளாரே எனமிது இத்தனை அன்பு செலுத்தும் தங்களை காணும் ஆவலில் தான் இங்கு வந்தேன் என்று பதிலுரைத்தார். அப்பூதி அடிகள் மனைவி குழந்தைகளை அழைத்து அப்பரை வணங்க செய்து அவருக்கு பாதபூசை செய்து ஆசி பெற்றார்
No comments:
Post a Comment