Thursday, 2 August 2018

புனிதவதி   அவன்   உண்ட   மாங்கனியை   சிவபெருமான்   அருளால்   பெற்றாள்   என்பதை   பரமதத்தனால்   நம்ப   முடியவில்லை .  அவளை   நம்ப   முடியாமல்   மறுபடி   வரவழைக்க   முடியுமா   என்று   கேட்கிறான் .  அவளும்   வேறு   வழியின்றி   ஈசனிடம்   மன்றாடுகிறாள் .   ஈசன்   கருணை   கடலன்றோ .  மறுபடியும்   ஒரு   கனியை   வழங்குகிறார் .  ஆனால்   பரமதத்தன்    அதை   பெறமுடியாமல்   அது   மறைந்து  விடுகிறது .  அதை   கண்ட   அவன்   அதிசயமும்   ஆச்சர்யமும்   அடைந்து   தன்   மனைவியை   சாதாரண   பெண்ணாக   காண   முடியாமல்   அவளுடைய   தெய்விக   சக்தியை   உணர்ந்த   அவன்   உள்ளத்தில்   அவள்   உயர்ந்து   நின்றாள் .  அவளை   மனைவியாக   சராசரி   பெண்ணாக   ஏற்க   அவன்   மனம்   இணங்கவில்லை .  அவளை   தெய்வத்திற்கு   சமமாக   மதித்தான் .  அதனால்   அவளை   மனைவியாக   நடத்த   மனம்   இடம்   கொடாததால்   அவன்   செய்வதறியாமல்  திணறினான்   அவளுடைய   மனதை   புண்படுத்தவும்   விரும்பவில்லை .  செய்வதறியாமல்  அவன்   வியாபாரம்   செய்ய   கடல்   கடந்து   போவதாக   சொல்லி   கப்பலில்   சரக்கை   ஏற்றிக்கொண்டு   பாண்டிய   நாடு  சென்று   ஒரு  துறைமுகத்தில்   இறங்கினான் .   அங்கு  வியாபாரம்   தொடங்கினான் .

No comments:

Post a Comment