இயற்கையாக மனித இனத்தை ஆட்டி படைக்கும் ஆசாபாசங்கள் அவரை எந்த சமயத்திலும் பாதித்ததே இல்லை .சலனமே இல்லா மனத்தோடு சிவபெருமானையும் அவர் அடியார்களையும் பூசிப்பதே தன் வாழ்வின் லட்சியமாக வாழ்ந்து வந்தார் . அவருடைய மனைவியும் அதற்கு சிறிதும் குறைவில்லாத பக்தியுடனும் பற்றற்ற நிலையுடனும் கணவன் சொல்லே வேதவாக்காக எண்ணியே அவருக்கு உறுதுணையாய் அமைதி யுடன் வாழ்ந்து வந்தார் . இத்தகைய ஆபூர்வ தம்பதிகளின் பெருமை இவ்வாறு குடத்திலிட்ட விளக்காக இருப்பது ஐயன் மனத்திற்கு பொறுக்கவில்லை . இதை உலகத்திற்கு உணர்த்த தன் திருவிளையாடலை துவக்குகிறார் .
No comments:
Post a Comment