Friday, 17 February 2017

இயற்பகையார்   இனி   அவள்   உமக்கு   உரியவள்.  அழைத்து   செல்லலாம் .  வேறு   ஏதாவது   சேவை   தேவையா ? என   வினவுகிறார் . உடனே   அடியார்   இனி   தான்   நான்  கேட்க   போவது   பெரிய   உதவி .  அதை   செய்தால்   போதும்   என்கிறார் .  உடனே   இயற்பகையார்   சொல்லுங்கள்   செய்ய   காத்திருக்கிறேன்  என்கிறார் .   உடனே   சிவனடியார்   அப்பனே,  உன்   மனைவியை   நான்   அழைத்துக்கொண்டு   இந்த   ஊரை   தாண்ட   முடியுமா?  உங்கள்   சுற்றத்தாரும்   ஊர்   மக்களும்   என்னை  சும்மா   விடுவார்களா ?  என   வினா   எழுப்பினார் .  எங்களை   பத்திரமாக   ஊர்   எல்லை   வரை   கொண்டுபோய்   விடு   என்கிறார் . அவரும்   இதை   எப்படி   மறந்து   போனேன்   என்று   தம்மையே   நொந்துகொண்டு   கவலை   வேண்டாம்   சுவாமி   நான்  உங்களை   பத்திரமாக   வழி   அனுப்புகிறேன்   என்று   சொல்லி   தன்  வாளுடன்   அவர்களுக்கு   காவலாக   முதலில்   செல்கிறார் .  எதிர்பார்த்தபடி   உறவினர்கள்   திரண்டு   வந்து   எதிர்க்கின்றனர் .  இயற்பகையார்   கத்தியை    சுழற்றியபடி   எல்லோரையும்   எதிர்த்து   வீழ்த்தியபடி   முன்னேறினார்    சினடியாரும்   இயற்பகையார்   மனைவியும்   பின்   தொடர்ந்தனர் .  ஊர்   எல்லை   தாண்டியவுடன்   இயற்பகையார்   சிவனடியாரை   வணங்கி   விட்டு   திரும்பி கூட   பார்க்காமல்   திரும்ப   புறப்பட்டார் .  அவர்   சிறிது   தூரம்  வந்தபோது   இயற்பகையாரே   என்ற   குரல்   கேட்டு   திரும்பினார் .  என்ன   ஆச்சர்யம் !  ஈசன்   அம்மையுடன்   காட்சி   தந்தார் . ''இயற்பகையார்   உமது   மனஉறுதியும்   பற்றற்ற   நிலையம்   எம்மை   அதிசயிக்க   வைக்கிறது .  நீர்   உம்மனைவியுடன்  சுகமாக   வாழ்ந்து  பிறகு   எம்மை  வந்தடைவீர்     .  ''  என்று   வாழ்த்தி   அவர்   வாளுக்கு   இறையானவர்களை   பிழைக்க   செய்கிறார் .

No comments:

Post a Comment